
ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi
1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்தமாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து
வருகை மிகச் சமீபம்
2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம்
தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
ஆயத்தமாகிடுவோம்
3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம்
முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்
4. தேடாதே உனக்கு பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம்
தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர்