
அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai
அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்
அன்பின் ஜனமே கலங்காதே
ஆறுதல் உன்னை நிரப்பிடும்
இலங்கை ஜனமே திகையாதே
இமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்
இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2)
அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்
மீண்டும் வீடு வருகின்றதை
எனது கண்கள் பார்க்கின்றதே
எனது வாஞ்சை பெருகின்றதே (2)
உலர்ந்துபோன எலும்பு எல்லாம்
உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்
அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமே
தேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2)
பாழாய்ப்போன கிராமம் எல்லாம்
மகிமை நிறைந்த பட்டணங்களாய்
மாறும் நேரம் வருகின்றதே
மன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)