அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar
அதிசய தேவன் துணையிருப்பார்
அனுதினம் உன்னை காத்திடுவார்
இவ்வேளையிலே நன்றியுடனே
இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய்
1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர்
அன்புடனே உன்னை மீட்டவர்
என்றுமாய் நீ என்னுடையவன் (2)
என்றே அன்பாய் கூறுபவரே
2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம்
அதிசயமாய் உன்னை தாங்கிடும்
மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2)
புது ஆண்டிதில் புதுமை காண்பாய்