அநாதிதேவனின் அடைக்கலத்தில் – Anadhi devanin adaikalathil
அநாதிதேவனின் அடைக்கலத்தில் – Anadhi devanin adaikalathil
அநாதிதேவனின் அடைக்கலத்தில்
என்றும் வாழ்ந்திருப்பேன் – நான் – (2)
என்ன வந்தாலும் நம்புவேன்
என் மீட்பர் இயேசுவை
1. வாலிப நாட்களில் தேடி சென்றேன்
இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ….ஆ….ஆ….ஆ….
அவரின் பணியை செய்திடவே
தேவன் பரிசுத்த ஆவி தந்தார்
கடைசி நாள்வரைக்கும்
என்னை கண் மணி போல் காப்பார்
அநாதிதேவனின் அடைக்கலத்தில்
2. அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன்
இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ….ஆ….ஆ….ஆ….
அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன்
தேவன் இம்மட்டும் வழி நடத்தினார்
இருக்கின்றவராகவே இயேசு என்றும் இருக்கின்றாரே
அநாதிதேவனின் அடைக்கலத்தில்