அந்தரங்கமாக வந்த நீர் – Antharangamaha vantha Neer
அந்தரங்கமாக வந்த நீர் – Antharangamaha vantha Neer
பல்லவி
அந்தரங்கமாக வந்த நீர்
ஆர்? சொல்ல வேணும்
யேசையரோ காணும்.
அனுபல்லவி
கந்த மா மலர் சோலை சூழ் வெல்லை
காவில் வந்தீரோ! என் மேற்
காதல் கொண்டீரோ!
சரணங்கள்
1.பாதியிரவிற் பரம சேனைகள் பாடுவதேதோ! வெகு
சோதியாய்ப் புன்மிசை துயில்கின்ற
சூட்சமுமேதோ! அதைச்
சொல்லவொண்ணாதோ!
2.கோவலர் அமிழ்தோடு வந்துமைக் கும்பிடுகிறார்; நல்ல
குவளை விழியாள் அன்னை மரிமடி
கொம்மையுண்ணுகிறீர்;- குறு
நகையுங் கொள்ளுகிறீர்;
3.வாலுடு விண்ணின்று கண்களை மருட்டுதே என்னமோ! உயர்
சாலப் பொருள்களோடு ஞானிகள்
சந்திப்பதேனோ, இந்த
ஜாலமுமேனோ!
Antharangamaha vantha Neer Song Lyrics in English
Antharangamaha vantha Neer
Aar Solla Veanum
Yeasaiyaro Kaanum
Kantha Maa Malar Solai Soozh Vellai
Kaavil Vantheero En Mear
Kaathal Kondeero
1.Paathiyiravir Parama Seanaigal Paaduvathetho! Vegu
Soothiyaai Punmisai Thuyilkintra
Sootchamumeatho Athai
Sollavonnaatho
2.Kovalar Amilthodu Vanthumai Kombidukiraar Nall
Kuvalai Vizhiyaal Annai Marimadi
Kommaiyunnukireer Kuru
Nagaiyung Kollukiraar
3.Vaaludu Vinninitru Kankalai Maruttuthae Ennamo Uyar
Saala porullalodu Gnannigal
Santhipathaeno Intha
Jaalamuneano!