
அன்னை அன்பிலும் விலை – Annai Anbilum vilai Un Yesuvin
அன்னை அன்பிலும் விலை – Annai Anbilum vilai Un Yesuvin
அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய் தந்தவர்
உன்னை விசாரிப்பார்
உன் இயேசுவின் தூய அன்பே
பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா
அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய் நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய் தேவன் ஈவாரே
அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா
அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
உன் இயேசுவின் தூய அன்பே