
அன்பினால் ஆராதிப்பேன் – Anbinaal Aarathipen
அன்பினால் ஆராதிப்பேன் – Anbinaal Aarathipen
அன்பினால் ஆராதிப்பேன்
ஆய்யுல்லாம் ஆராதிப்பேன்
1. துன்பமோ துயரங்களோ
துணையாளர் நீர்தானே
இன்பத்தின் நேரத்திலும் – என்
மணவாளன் நீர்தானே
2. என் மேய்ப்பர் நீர்தானே
எனக்கொன்றும் குறையில்லையே
நன்மையையும் கிருபைகளும்
நாளெல்லாம் என்னைத் தொடரும்
3. என் தலை எண்ணெயாலே
அபிஷேகம் செய்கின்றீர்
என் உள்ளம் நன்றியாலே
நாளெல்லாம் பாடச் செய்தீர்
4. என் தேவன் நீர்தானே
உம்மையே நேசிக்கின்றேன்
உலக மேன்மையெல்லாம்
உமக்கு இணையில்லையே