
அழாதே நீ அழாதே – Aazhathey Nee Aazhathey
அழாதே நீ அழாதே – Aazhathey Nee Aazhathey
அழாதே நீ அழாதே
அழாதே என் செல்வமே
அழாதே என் செல்வமே
உனக்காக நான் இரத்தம் சிந்தி
உன்னையே மீட்டுக் கொண்டேனே
இரத்தத்தால் தூக்கி எடுத்தேனே
1. கடன்கள் உன்னைச் சூழ்ந்துகொண்டதோ
கை பிரயாசங்கள் வீணாய் போகுதோ
உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்
உன் கடனை மாற்றுவார்
உன்னை ஆசீர்வதிப்பார்
2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோ
வீண் பழிகலால் நீ சோர்ந்து போனாயோ
உன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்
ஆற்றித் தேற்றுவார் – உன்னை
அனைத்துக் கொள்ளுவார்.
3. இழப்புகளால் துவண்டு போனாயோ
உன் ஜீவனை வெறுத்துவிட்டாயோ
உன் ராஜா உயிரோடிருக்கிறார்
வெற்றி தருவார்
உன்னை உயாத்தி தேற்றுவார்
4. மனக் குழப்பங்களால் கலங்குகின்றாயோ
உடல் வியாதிகளால் தவித்து போனாயோ
உன் இயேசு உயிரோடிருக்கிறார்
உன் பயத்தை போக்குவார்
நல்ல சுகத்தை தருவார்