ஆதாமின் பாவத்தாலே – Aathamin Paavaththalae
ஆதாமின் பாவத்தாலே அரூபனுரூபமான
அதிசயமிதோ பாரும்
மாதேவ புத்திரரான மானிடர் குழாங்களே நீர்
வல்லமைப் பிதாவி னோரே மைந்தனைச் சந்திக்க வாரும்
1.ஆதிபிதாவின் கிருபாசனத்தைத் துறந்தார்
அழகான மோட்ச செல்வ பாக்கியத்தை மறந்தார்
பாதகந்தீர வேண்டி பெத்தலையிற் சிறந்தார்
பராபரவஸ்து வானோர் பாலனாகப் பிறந்தார்
2. உன்னத வஸ்துவா னோருலகத்தை நேசித்தார்
ஒப்பிலாத் தேவ தேவன் மனுஷரையாசித்தார்
தன்னொளிவை விளங்கத் தானே பிரகாசித்தார்
சாதிகளுக்குத் தயவாயுப தேசித்தார்
3. மந்தையாயர் சந்திக்கச் சந்தோடமே விண்டார்
வான நாட்டைப் பிரிந்து மாட்டுக்கொட்டிலைக் கண்டார்
விந்தைத் திரு முதலார் கந்தைத் துணியைக் கொண்டார்
வேத காரணர் தானேமேவி தாயின் பாலுண்டார்
4. கன்னி மரியத் தாயார் சின்னக் குமாரனானார்
காரிருள் சூழ்ந்த கொடுங்கானகத்துக்குப் போனார்
மன்னன் றவீதரசன் வங்கிஷத் திருக் கோனார்
மாறுதலன்றி யென்றுந் தானே யிருக்குந் தானார்
5. விண்ணவர் தேட்டாரே மிக்க கொண்டாட்டாரே
வேதநாயகன் சொன்ன பாட்டையுங் கேட்டாரே
மண்ணுலகனைத்தையும் வலிமையாய் மீட்டாரே
வந்தாரைத் தள்ளி விடமாட்டாரே நாட்டாரே
Aathamin Paavaththalae Lyrics in English
Aathamin Paavaththalae Aruban Urubamaana
Athisayamitho Paarum
Maa Deva Puththiraraana Maanidar Koozhankalae Neer
Vallamai Pithivinorae Mainthanai Santhikka Vaarum
1.Aathi Pithavin Kirubasanaththai Thuranthaar
Alagaana Motcha Selva Bakkiyaththai maranthaar
Paathantheera Veandi Beththalaiyil Siranthaar
Paraaparavasthu Vaanorr Paalaganaaga Piranthaar
2.Unnatha Vasthu Vaanoarulagaththai Neasithaar
Oppillatha Deva Devan Manusaraiyasithaar
Thannoliyai Vilanga Thaane Pirakasiththaar
Saathikalukku Thayavayu Deasiththaar
3.Manthai Aayar Santhikka Santhodamae Vindaar
Vaana Naattai Pirinthu Maattukottilai Kandaar
Vinthai Thiru Muthalaar Kanthai Thuniyai Kondaar
Vedha Kaaranar Thaanaemeavi Thaayin Paal Undaar