ஆத்தும பாரமே வேண்டும் – Aathuma Paaramae Vendum
ஆத்தும பாரமே வேண்டும் – Aathuma Paaramae Vendum
ஆத்தும பாரமே வேண்டும்
அழுதிடும் கண்களே வேண்டும்
1.ஒரே ஒரு வாழ்க்கை
உமக்குத் தருகின்றேன்
ஊரெங்கும் ஓடி
உம்மைச் சொல்கிறேன்
2.இந்தியா இயேசுவை அறியணும்
இரவும் பகலும் ஜெபிக்கணும் – நான்
3.திறப்பிலே தினமும் நிற்கணும்
சுவரைத் தினமும் அடைக்கணும்
4.சபைகள் எங்கும் பெருகணும்
சாத்தான் செயல்கள் அழியணும்
5.சீடர்கள் எங்கும் வளரணும்
சாட்சியாய் வாழ்ந்து மடியணும்
6.ஆவியில் நிறைந்து வளரணும்
ஆர்ப்பரித்து ஆண்டவரைத் தேடணும்