ஆயிரம் தலைமுறைக்கும் – AAYIRAM THALAIMURAIKUM
ஆயிரம் தலைமுறைக்கும் – AAYIRAM THALAIMURAIKUM
ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வாக்கு மாறாதே
செய்திட்ட உடன்படிக்கை செயல் இழந்தும் போகாதே
கோபங்களும் இல்லை
ரோகங்களும் இல்லை
சாபங்களும் இல்லை சிலுவையில் அவர் ஜெயித்திட்டார்
மலைகள் விலகிடலாம் பர்வதந்கள் பெயர்ந்திடலாம்
உந்தனின் கிருபை எந்தனை விட்டு விலகாது ஒருநாளும்
சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராது
நீதியில் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு தூரமாவேன்
பயமும் திகிலும் தீங்கும் என்னை அனுகுவதேயில்லை
எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
இனி ஒரு பலியுமில்லை இரத்தம் சிந்தபடுதலில்லை
உந்தன் வார்த்தையை எந்தன் இதயத்தில் எழுதினீர் உம் கரத்தால்
இனி எந்தன் பாவங்களை நினைப்பதேயில்லை