ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom
ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom
ஆராதிக்கக் கூடினோம்
ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
வல்ல இயேசு நம் தேவன்
என்றென்றும் அவர் நல் தேவன்
தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே
சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே
கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே
தேவ சாயல் சபையில் தோன்றுதே
தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
தேவ சேவையே என் கெம்பீர சேவை
தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்