இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai
இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை
இன்று கண்ட துன்பம் இனி வருவதில்லை
வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது
உன் பாதம் கல்லில் இடறாது
செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்
யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்
எரிகோ தூளாக இடிந்து விடும்
கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய்
நோய்கள் உன்னை நெருங்குவதில்லை
பேய்கள் உன்னை அணுகுவதில்லை
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை
மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்
சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போது
மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது