இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
2. செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
5. வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய்
கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
6. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்திலே
அன்பு கரம் நீட்டிடுவாய்
7. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல்
ஆளுகை செய்திடுங்கள்