
இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai
பல்லவி
இன்றைக்கே மனந்திரும்புவாய்
இல்லையானாலும் கெடுவாய்
அனுபல்லவி
பின்னைக்கென்று நீ பின்னிடுவது
பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை
சரணங்கள்
1. நீதி வெட்டக் கை ஓங்குதே
நீடிய சாந்தமோ தாங்குதே,
மா தயவோடு பிராண நாதர்
வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே
2. நாளைப் பிழைப்பு சாத்தியம்
நரக பாடுன் சம்பாத்தியம்
ஆவியானவர் கூவியழைக்கும்
வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே
3. அந்திய காலம் பார்க்கலாம்
அதுவரைத் தனம் சேர்க்கலாம்
பிந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது