இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga
இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க
சொன்னபடி நடந்திடுவேன் – நீங்க
சொன்ன வழி சென்றிடுவேன் – (2)
சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயா
என்னோடு தங்கி இருங்க
என்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா
பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்
சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்
வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா