இயேசுவின் அற்புதங்கள் – Yesuvin Arputhangal
இயேசுவின் அற்புதங்கள் – Yesuvin Arputhangal
கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இராசமாய் மாற்றின இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
பிறவி குருடர்கள்க்கு பார்வையளித்து கிருபை செய்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
செவிடர்களாயிருந்த மனிதர்க்கு கேள்வியை அளித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
ஊமையான மனிதர்களை பேசவைக்கும் அதிசயத்தை காண்பித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
முடவர் சப்பானியர் திமிர்வாதக்காரருக்கும் சுகமளித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
பிசாசின் பிடியில் அகப்பட்டோரை எல்லாம் விடுவித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
குஷ்டரோகிகள்க்கு சுகம்கொடுத்து நல்வாழ்வை அளித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அதிசய இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
யவீருவின் மரித்த மகளை உயிரோடு எழுப்பின இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
நாயீனூர் விதவையின் மகனுக்கு உயிர் கொடுத்து வாழ்வளித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
ஆழத்திலே வலை போட்டு திரளான மீன்களை பிடிக்கவைத்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
பெருங்காற்று வந்தபோது காற்றையும் கடலையும் அமர்தின இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
இரவில் நாலாம் ஜாமத்தில் கடலின் மேல் நடந்து பிரம்மிக்கவைத்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
வரிக்கான பணத்தை மீன் வாயில் நின்று கிடைக்கவைத்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
பன்னிரண்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீயை குணமாக்கிய இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷனை ஓய்வுநாளில் குணமாக்கின இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
ஐந்தப்பமும் இரண்டு மீன்களும் கொண்டு ஐந்தாயிரம்பேரை போஷித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
மீதியான அப்பமும் மீனும் பன்னிரண்டு கூடைகளில் நிரம்பச்செய்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
ஏழப்பமும் சில சிறு மீன்களும் கொண்டு நாலாயிரம்பேரை போஷித்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
எம்மாவூரில் சீஷர்களுக்கு காட்சியளித்து கண்களை திறந்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
உமது சாபத்தால் அத்தி மரமும் உடனே பட்டுப்போக வைத்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
மல்ககூசின் வெட்டப்பட்ட காதை ஒட்டவைத்து அற்புதத்தை செய்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்துவாம் இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…
கதவுகள் பூட்டியிருந்தும் சீஷர்களிடம் வந்து தரிசனம் தந்த இயேசுவே
ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…