இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai
ஆசை ஆசை ஆசை
இயேசு பாலனை பார்த்திட ஆசை
ஆசை ஆசை ஆசை
யூத ராஜனை வாழ்த்திட ஆசை
பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்க
சத்திர தொழுவத்தை அடைவோமே
உத்தமர் இயேசுவின் பாதம் பணிந்து
நித்திய வாழ்வினைப் பெறுவோமே
ஒன்றாய் கூடி இன்றே செல்வோம்
வான தூதர் பாடிட
கான மேய்ப்பர் ஆட
ஞான சாஸ்திரிகள் தேடிட
வானில் வெள்ளி தோன்ற
அன்னை மரி மடியினிலே
ராவின் குளிரினிலே
முன்னணையில் தாழ்மையாக
பிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன்
மந்தை மேய்ப்பன் நான் என்றால்
ஆட்டுக் குட்டி படைப்பேன்
விந்தை தூதன் நான் என்றால்
பாட்டுப் பாடி துதிப்பேன்
உலகத்தையே படைத்தவரே
யாது பரிசளிப்பேன்
இதயத்தையே அன்பாக
கொடுப்பேன் கொடுப்பேன் இயேசுவுக்காக