
இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam
பல்லவி
இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
அனுபல்லவி
எத்தனை துன்பங்கள் வந்த போதும்
அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம்
சரணங்கள்
1. அந்நியரும் பரதேசியுமாய்
உன்னத பதவிக் கபாத்திரராய்,
மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்
இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய
2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு,
உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;
தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,
தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய
3. பந்து ஜனங்களை நேசித்தாலும்,
பகவான் மீது மா நேசம் கொண்டு;
உலகத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளி,
உன்னத பாதையில் விரைந்து செல்லும் – இரட்சண்ய
4. எமது நடைகளே பிரசங்கமாய்
பிறரது பாவத்தை எடுத்துரைத்து;
சத்துருவின் துர்க் கோட்டைகளை
சுற்றி எக்காளத்தை ஊதுவதால் – இரட்சண்ய