
உங்க அன்பு ஒன்று போதுமைய்யா – Unga Anbu Ontru Pothumaiyaa
உங்க அன்பு ஒன்று போதுமைய்யா – Unga Anbu Ontru Pothumaiyaa
D-min/slow rock/T-92
உங்க அன்பு ஒன்று போதுமைய்யா
நான் அசைவுற மாட்டேன் ஐயா
1. புயல் வந்து தாக்கினாலும் – நான்
போராடி ஜெயிப்பேனைய்யா
புகலிடம் நீர்தானய்யா – உம்மை
புகழ்ந்து பாடுவேனைய்யா – உம்மை
ஆராதனை ராஜா ஆராதனை
ஆராதனை அன்பே ஆராதனை
2. பயணத்தில் பயம் வந்தாலும்
பயணத்தை தொடர்ந்திடுவேன் – என்னை
படைத்தவர் நீர்தானய்யா
பயத்தை மேற்கொள்கிறேன்
3. அரசாளும் தந்தை நீரே – என்னை
ஆளுகை செய்யுமைய்யா
அர்ப்பணித்தேன் என்னை நானே
என்னை அனுதினம் நடத்தும் ஐயா
4. என் மேய்;ப்பர் நீர் தானய்யா
எனக்கொன்றும் குறையில்லையே
நன்மையும் கிருபையுமே
நாளெல்லாம் என்னைத் தொடருமே