உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai
உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai
உடைஞ்சு போன என்னை
நீர் தூக்கி எறியல
நொறுங்கி போன என்னை
நீர் கைவிடவில்ல (2)
என்னை புதிதாக உமக்காக
வனைந்துக் கொண்டவரே
உம் அழகான சிறகால
மறைத்துக் கொண்டவரே (2)
சொத்து சுகம் இருக்கும்போது
ஆயிரம் பேரு
சொந்தம் என்று சொல்லிக்கிட்டு
ஆயிரம் பேரு (2)
ஒரு நாளில் எல்லாத்தையும்
இழந்து நிற்கையில
கண் கண்ட எல்லாமேதான்
அழிஞ்சு போகையில
ஒருத்தர் கூட எனக்குதவல
ஒருத்தர் கூட என்னோடிருக்கல (2)
மாளிகையில் இருந்த நான்
மண் தரையினில
மானம் மரியாதை எல்லாம்
இழந்து நிற்கையில (2)
சொந்தம் என்று சொல்லிக்கிட்டு
யாரும் வரவில்ல
நிந்தனைய சொல்லி அழ
ஒருத்தர் எனக்கில்ல
வேதனைய மீள முடியல
விடிவுக்கான வழியும் தெரியல (2)
மடிந்துபோக இருந்த என்னை
நீர் மறக்கவில்ல
உலகமே வெறுத்தாலும்
நீர் வெறுக்கவில்ல (2)
சிதைஞ்சு போன எந்தன் வாழ்வு
சீரமைச்சவரே
இழந்து போன எல்லாத்தையும்
மீட்டுத்தந்தவரே
இரட்சகரே என் இயேசுவே
நித்தியமும் நிரந்தரம் நீரே (2)
-உடைஞ்சு போன