
உன் சஞ்சலத்தை விட்டு – Un Sanjalathai Vittu Lyrics
உன் சஞ்சலத்தை விட்டு – Un Sanjalathai Vittu Lyrics
1.உன் சஞ்சலத்தை விட்டு,
கர்த்தாவின் சபையே,
என் மீட்பரைத் துதித்து,
ஆனந்தங் கொள்வாயே;
நீ நம்பி எதிர்பார்த்த
உன் மீட்பர் பிறந்தார்;
கிலேசம் யாவும் ஆற்ற
உன்னோடு தங்குவார்.
2.ஆ, யேசுவே, நீர் வாழ்க!
பிதாவின் சுதனே,
மா ஏழை மாந்தனாக
பிறந்த தேவனே,
விண்ணோருக்காதி கர்த்தர்,
மண்ணில் பிறந்தீரோ?
அநாதியான நித்தியர்,
குழந்தை ஆனீரோ?
3. நான் வானத்துக்கு ஏற
பூலோகத்தில் வந்தீர்;
நான் தூதரோடு சேர
மாந்தர்க்குள் தங்கினீர்;
நான் வாழ உம்மை தாழ்த்தி,
பிழைக்க மரித்தீர்;
நான் என்றும் உம்மை வாழ்த்தி
வணங்க, ரட்சிப்பீர்.
Un Sanjalathai Vittu Lyrics in English
1.Un Sanjalathai Vittu
Karthavin Sabaiyae
En Meetparai Thuthithu
Aanantham Kolvaayae
Nee Nambi EthirPartha
Un Meetpar Piranthaar
Kileasam Yaavum Aattra
Unnodu Thanguvaar
2.Aa Yesuvae Neer Valka
Pithaavin Suthane
Maa Yealai Maanthanaaga
Pirantha Devanae
Vinnorukkaathi Karththar
Mannil Pirantheero
Anaathiyaana Nithiyar
Kulanthai Aaneero
3.Naan Vaanathukku Yeara
Poolokaththil Vantheer
Naan thotharodu Seara
Maantharkkul Thangineer
Naan Vaazha Ummai Thaalthi
Pilaikka Mariththeer
Naan Entrum Ummai Vaalthi
Vananga Ratchippeer