எந்தன் நண்பனே – Endhan Nanbanae
எந்தன் நண்பனே – Endhan Nanbanae
எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)
ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே
1. ஏர்டெலில் போட்டோம் கடலை
ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
சுற்றித் திரிந்தோம் (2) (அட)
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே
இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
கலக்கிடலாம் (2)
2. ஸ்கூலில் கடைசி பென்ச்சு
ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
முட்டை எடுத்தோம் (2) (அட)
அட ஆகாதவன் என்று
தள்ளப்பட்ட கல்நான்
என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு (2)