எனக்குள்ளே காற்று வீசுது – Enakulley Kattru Veesuthu
எனக்குள்ளே காற்று வீசுது – Enakulley Kattru Veesuthu
F-maj/6/8 beat/T-138
எனக்குள்ளே காற்று வீசுது – அது
ஏதேனிலிருந்து வீசுது
1. எழுப்புதலின் காற்று வீசுது –அது
இந்தியா எங்கும் வீசுது
பதரெல்லாம் பறக்கப் போகுது
பாரதம் செழிக்கப் போகுது
2. சபைகளெல்லாம் வளரப்போகுது
சத்தியம் ஜெயிக்கப் போகுது
சாபமெல்லாம் நீங்கப்போகுது – தேசத்தில்
சமாதானம் நிலைக்கப்போகுது
3. யோர்தான் பிரியப்போகுது
எரிகோ உடையப்போகுது
கானான் தேசம் சொந்தமாகுது – நம்ம
கண்ணீர்ரெல்லாம் மறையப்போகுது
4. ஆமான் ஆட்சி அழியப்போகுது – நம்ம
அப்பா ஆட்சி நிலைக்கப் போகுது
சிலுவைக்கொடி பறக்கப் போகுது
சிறைவாழ்வு மறையப்போகுது