என்னையும் உம தாட்டின் – Ennaiyum uma thaatin
பல்லவி
என்னையும் உமதாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், ஏசுவே.
சரணங்கள்
1.’வன்னியான தோர் அலகைப் பேய் தனை
வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்
திந்நிலத்தினில் வந்துதித்த நல்
ஏசுவே, எனைச் சேர்த்திடும்;
2.ஆயக்காரரோடு பாவிகளின் ‘கும்பை
அழைத்து நல் விதை முளைத்திட, வெகு
நேயமாகவே ஜீவப் புனல் ஈந்த
நிமலனே, எனைச் சேர்த்திடும்;
3.ஐயிருபது ஆட்டினில் ஒன்
றகன்றிட்டால் மனம் உகந்து கோன் – அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே, எனைச் சேர்த்திடும்;
4.வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்த்திடும்;
5.நல்ல மேய்ப்பன் நான், என மொழிந்த என்
நாதனே; ஞானப் போதனே;-ஜீவப்
புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனை
போஷித்து முசிப்பாற்றிடும்;
6.மேய்ப்பராகவே இருக்கிறீர்; எந்தன்
மேய்ச்சலும் நீர் தாமல்லோ? ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும்;
7.அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்
தாட்டுக்காய்ச் சொந்த ஜீவனை-வெகு
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
ஏசுவே, எனைச் சேர்த்திடும்
Ennaiyum uma thaatin song lyrics in English
Ennaiyum uma thaatin Manthaiyo
Yeattru kaathidum – Yeasuvae
1.Vanniyaanathor alagai peai thanai
Vathaithida Ganana Belathudan Sirantha
Innilathinil Vanthuthitha Nal
Yesuvae Enai Searthidum
2.Aayakkararodu Paavikalain Kumbai
Alaithu Nal Vithai Mulaithidu Vegu
Neayamaagavae Jeeva Punal Eentha
Nimalanae Enai Searththidum
3.Aiyiruppathu Aattinil Ontragakantrittaal
Manam Uganthu Koan Athai
Meiyathagavae Theaduvaan Entra
Meipparae Enai Seartthidum
4.Vaasalagave Irukkirean Enaal
Vanthavan Manam nonthidaan Vegu
Neasamagvae Vaalvaan Entra Nal
Nimalanae Enai Seartthidum
5.Nalla Meippan Naan Ena Molintha En
Naathanae Gnana pothanae Jeeva
Pullula Sthalanthannil Kondeanai
Poshithu Musipaattridum
6.Meipparagave Irukireer Enthan
Meichalum Neer Thamaallo Gnana
Vaaipulla Sathya Maraivil Meinthu Naan
Valarnthida Arul Purinthidum
7.Anbudaiya Mei Meipparayiruntha
Thattukaai Sontha Jeevanai Vegu
Inbamagavae Eenthu Meetta Nal
Yesuvae Enai searthidum