என்னை பெருகப்பண்ணுவார் – Ennai Perugappannuvaar
என்னை பெருகப்பண்ணுவார் – Ennai Perugappannuvaar
சின்னவன் ஆயிரமும்
சிறியவன் பெலத்த ஜாதியாவான்
ஏற்ற காலத்திலே தீவிரமாய் இதை நடத்துவிப்பேன்
என்று கர்த்தர் சொன்னாரே
Chorus
என்னை பெருகப் பண்ணுவார்
பலுகி பெருகப் பண்ணுவார்
எந்தனின் எல்லையை விரிவாக்குவார்
என்னை பெருகப் பண்ணுவார்
பலுகி பெருகப் பண்ணுவார்
நெருக்கமில்லை இனி விசாலம் உண்டாகச் செய்வார்
Verse 1
இப்பொழுதிருப்பதைப் பார்க்கிலும்
ஆயிரம் மடங்குகள் அதிகமாகச் செய்குவார் -2
என்னை வர்த்திக்கச் செய்வார் குறுகிப் போவதில்லை
மகிமையடைய செய்வார் சிறுமைப்படுவதில்லை -2
Verse 2
நிச்சயம் என்னையும் ஆசீர்வதிப்பார்
பெறுகவே பெறுகிடச் செய்திடுவார்
நான் வாலாவதில்லை தலையாக்குவார்
நான் கீழாவதில்லை மேலாக்குவார் -2