என் இயேசுவே – Yen Yesuvae
என் இயேசுவே – Yen Yesuvae
என் இயேசுவே…
1.தனிமையில் எம் இணையே
துன்பத்தில் என் துணையே,
உம் இரத்தம் கொண்டு
எந்தன் இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை
நீரும் தப்புவித்தீரே
எந்தன் இயேசுவே – 4
2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே
துதி செய்து பாடுவோரை
தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து புது வாழ்வு அளித்திடுமே இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல் தினம்தோறும் சுமக்கின்றார்
அதை உணர்ந்தே நான் மகிழ்ந்தேனே