என் செவி உம் குரல் – En Seavi Um Kural
என் செவி உம் குரல் – En Seavi Um Kural
என் செவி உம் குரல் கேளாமல்
என் விழி உம் அன்பை பாராமல்
என் உதடு உம் துதி பாடாமல்
வாழக் கூடுமோ (2)
உயிரே எந்தன் உறவே
ஒளியாய் வந்த உறவே
கனிவாய் என்னை நடத்திடும் இயேசுவே (2)
கடல் அலைகளின் ஓசை செவியில்
கேட்டிடும் பொழுது
உம் குரலைக் கேட்க வேண்டி
ஏங்குது மனது (2)
அலை போல் வரும் சோதனை
கரைந்தோடிடுமே
கனவாய்க் கண்ட ஜீவியம்
கை கூடிடுமே (2)
உலகத்தின் பின் ஓடியக் கால்கள்
இன்றோ உமது
உன்னதப்பணி செய்திட வேண்டும்
சிலுவையைச் சுமந்து (2)
அடைப்பட்ட வாசலும்
உடைப்பட்டிடுமே
சிறைப்பட்ட நெஞ்சங்கள்
உம்மில் சேர்ந்திடுமே (2)
என் கரம் உம் பணி செய்யாமல்
என் கால்கள் உம் வழி செல்லாமல்
என் மனம் உம்மையே எண்ணாமல்
வாழக் கூடுமோ (2)