என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar
என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே (2)
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே (2)
1.செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே