
ஒப்புவித்தேன் ஐயனே – Oppuviththean Aiyyanae
ஒப்புவித்தேன் ஐயனே – Oppuviththean Aiyyanae
ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே
1. சுட்டெரிக்கும் அக்கினியால்
சுத்திகரித் தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்மா சரீரமும்
ஆத்தும நேசரே படைக்கிறேன்
2. அத்தி மரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்
3. எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்
4. சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சொர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவ கிரீடம் முன்னே வைத்தே
ஜீவியக் காலம் நடந்திட