ஒரு தகப்பனைப் போல – Oru Thakappanae Pola
ஒரு தகப்பனைப் போல – Oru Thakappanae Pola
ஒரு தகப்பனைப் போல
சுமந்தவரே
தாயினும் மேலாக
அன்பு கூர்ந்த நேசரே – 4
கிருப கிருப கிருப உங்க கிருப
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருப
துரத்துண்ட பறவை போல
அங்கும் இங்கும் அலைந்தேன்
தங்கும் இடம் இல்லாமலேயே
தவித்து துடித்து திரிந்தேன்
அனாதி தேவனே அடைக்கலமானீரே
அப்பா உங்க கிருபை ஒன்றே
ஆதரவானதே – கிருப கிருப கிருப
அனாதைகள் என்று சொல்லும்
மனிதர் கூட்டம் நடுவே
ஆதரவாய் இருப்பேன் என்ற
உந்தன் வாக்கு பெலனே – 2
தாயை போல தேற்றினீர்
தந்தை போல ஆற்றினீர்
அப்பா நீங்க இருக்கையிலே தப்பா நாங்க போகலேயே – 2 – கிருப கிருப கிருப
காசு பணம் இல்லாமல் நான்
அங்கும் இங்கும் அலைந்தேன்
பசி தாகம் தணியாமல் தவித்தே
நான் அழுதேன்
எலியாவின் தேவனே எளியோனை (பிள்ளை என்னை)நினைத்தீரே
எல்லையில்லா உந்தன் அன்பால்
உயர்த்தி மகிழ்ந்தீரே – 2 – கிருப கிருப கிருப