கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil
lyrics :
கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2
என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்
பயமே இல்லையே -2
வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது
கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி -2
அதிகாலையில் நான் உம்மை நோக்கி
கதறினேன் கேட்டீரே -2
வசனம் வந்தது மகிழ்வு தந்தது
சதிகள் என்னை சூழ
புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன்
விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே -2
விலகாத உந்தன் அன்பு என்னை
ஆற்றித் தேற்றிட -2
விழிகள் மலர்ந்தது
வழிகள் பிறந்தது
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை