கண்ணாலனே கண்ணுறங்கு – Kannalanae Kannurangu song lyrics
கண்ணாலனே கண்ணுறங்கு – Kannalanae Kannurangu song lyrics
கண்ணாலனே கண்ணுறங்கு
கண்மணியே
கண்ணுறங்கு -2
உம்மை கண்டதும் நான்
வியந்தேனே
உமது அழகிலே என்னை
மறந்தேனே -2
நீரே என்னை மீட்க வந்த
ராஜா – உம்
நிழலில் நானும் தஞ்சம் ஆனேன் நாதா -2
ஆராரிரோ-4 (2)
1. புல்லனையில் தவழ்ந்து வந்த சின்ன பாலனே
புவியினை மீட்க வந்த தெய்வ பாலனே -2
ஏழைக்கோலமாய் மண்ணில் வந்தீரே
தாழ்மை ரூபமாய் அவதரித்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
2. காரிருள் சூளும் அந்த இரவு நேரத்தில்
கதிரொளியாய் தோன்றி எங்கள் இன்னல் தீர்த்தீரே -2
மாலைத் தென்றலும் மயங்கும் வேளையில்
மாந்தர் பாவமே போக்க வந்தீரே -2
வானகம் வாழ்த்திட வையகம் போற்றிட வந்தவரே
ஆராரிரோ -4(2)
கண்ணாலனே