
கனி கொடுப்போம் – Kani kodupom
கனி கொடுப்போம் – Kani kodupom
கனி கொடுப்போம் கனி கொடுப்போம்
இயேசுவுக்காய் நாம் கனி கொடுப்போம்
அல்லேலூயா (3)
1. இயேசுவே மெய்யான திராட்சச் செடி
நாமே கனிதரும் அவர் கொடிகள்
இயேசுவின் வசனம் நம்மைச் சுத்தி செய்யவே
மிகுந்த கினகளைக் கொடுத்திடுவோம்
2. அன்பு சந்தோஷம், சமாதானம்
நீடிய பொறுமை, நற்குணம் தயவு
விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமுமாம்
ஆவியின் நிறைவின் அடையாளமாம்
3. தனக்குத்தானே கனிகொடுத்து நின்ற
பயனற்ற இஸரவேல் பாழானதே
சுவர் மீது படர்ந்து பிறர்க்குக் கனிதரும்
யோசேப்பு போல நாம் துளிர்த்திடுவோம்
4. உதடுகளின் கனி ஸ்தோத்திரத்தை
உன்னத பலியாய்ச் செலுத்திடுவோம்
உள்ளமாம் வேரில் பரிசுத்தமிருந்தால்
உதடுகள் செயல்கள் பரிசுத்தமாம்
5. கனிதரும் சீடர் நாம் கனம் பெறுவோம்
கனிகளால் பிதாவைக் கனப்படுத்துவோம்
ஜீவ விருட்சத்தின் கனிகளைப் புசித்து
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்