கன்மலையாம் இயேசுவே – Kanmalaiyam Yeasuvae
கன்மலையாம் இயேசுவே – Kanmalaiyam Yeasuvae
கன்மலையாம் இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
ஆராய்ந்து அறிபவரே
வாழ்நாள் எல்லாம் ஸ்தோத்திரம்
நடந்தாலும் என் கூட வருவீர்
படுத்தாலும் என்னை சூழ்ந்து கொள்வீர்
என் வழிகளெல்லாம் உமக்கு தெரியும்
என் நினைவெல்லாம் நீர் அறிகின்றீர்
தாயின் கற்பத்திலே என்னை தெரிந்தெடுத்தீர்
உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர்
உம் கிரியைகள் அதிசயம் அற்புதம்
நான் என்றும் உம்மையே துதித்திடுவேன்
இருள் என்னை மூடிக்கொண்டாலும்
இரவிலும் நீர் வெளிச்சமாய் இருப்பீர்
வேதனை உண்டாக்கும் வழியை விட்டு
நித்திய வழிகளில் என்னை நடத்தும்
உம் கண்களுக்கு மறைவாகஎங்கே போவேன்
உம் சமூகத்தை விட்டு நான் எங்கே ஓடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
வாக்குத்தத்ததில் மாறாதவர்