கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi
கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai paadi
கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்
மேலான நாமத்தை பாடி போற்றுவோம்
மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்
நல்லவர் வல்லவர் பெரியவரே
வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்
நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திட
கலங்கிடாதே திகைத்திடாதே
மேலான காரியங்கள் செய்திடுவார்
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
வறட்சியான உந்தன் பாதையை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்
சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்
பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்
எண்ணெயினால் உன்னை அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்வார்
VENDUTHAL KETPAAR |Tamil Christian Song HD | CBLJC(official)