கர்த்தர் உன்னை எல்லா – Karthar Unnai Ella
கர்த்தர் உன்னை எல்லா – Karthar Unnai Ella
கர்த்தர் உன்னை எல்லா தீங்கிற்கும்
விலக்கிகாத்திடுவார்-2
உன் போக்கையும் உன் வரத்தையும்
இன்று முதல் என்றும் காப்பார்-2
காப்பாா் காப்பாா்
இன்று முதல் என்றும் காப்பார்-2
1.வருத்தப்பட்டு பாரம் சுமப்போரை
வருந்தி அன்பாய் அழைத்தாரே-2
நீ தேடும் நிம்மதியை
இன்று முதல் தருவாரே-2
தருவார் தருவார்
நிம்மதி தருவாரே-2-கர்த்தர்
2.கலங்கி நிற்கும் ஆத்துமாவே
கா்த்தா் உன்னை சுமப்பாரே-2
உன் வலிகள் யாவையும் நீக்கி
உன்னில் புது பெலனை அளிப்பாரே-2
அளிப்பார் அளிப்பார்
புது பெலன் அளிப்பாரே-2-கர்த்தர்
3.நெருக்கத்திலே கூப்பிட்ட உன்னை
தப்புவித்தேன் என்றாரே-2
அதிசயங்களை செய்திடும் தேவன்
இன்றே செய்வாரே-2
செய்வார் செய்வார்
அதிசயம் காணச் செய்வார்-2-கர்த்தர்