
கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum
கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum
F-min/Euro beat/T-122
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்துவார்
கலங்காதே மனமே
1. பாலைவனம் தான் உன் வாழ்க்கையோ
பசி தாகத்தால் வாடுகின்றாயோ
கூப்பிடுகின்ற யாவருக்கும்
உணவளிக்கும் தகப்பன் அவர்
2. அனாதை நீ என்று அழுகின்றாயோ
ஆதரிக்க யாருமில்லை என்கின்றாயோ
வந்தோரை வாழ வைக்கும் வள்ளல் அவர்
யாரையும் புறம்பே தள்ளாதவர்
3. ஈடுகட்ட முடியாத இழப்புக்களோ
உலக ஏமாற்றத்தால் தோல்விகளோ
குறையெல்லாம் நிறைவாக்கும் இயேசு உண்டு
நிறைநோக்கி உன்னை நடத்திடுவார்
4. வியாதியில் தனிமையில் தவிக்கின்றாயோ
பணமெல்லாம் செலவழித்து சுகமில்லையோ
காயத்தால் சுகம் தரும் இயேசு உண்டு
கண்ணீரை துடைப்பார் நன்றி சொல்லு