
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை
எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்
மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே
பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிழேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைததிருப்பேன்