
கல்மனம் கரைய கண்களும் பனிக்க – Kal Manam Karaiya Kankalum Panikka
கல்மனம் கரைய கண்களும் பனிக்க – Kal Manam Karaiya Kankalum Panikka
கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)
என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க
பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2
நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா