கள்ளமுறுங் கடையேனும் – Kallamurum Kadaiyeanum
கள்ளமுறுங் கடையேனும் – Kallamurum Kadaiyeanum
1.கள்ளமுறுங் கடையேனும் கடைத்தேறப் பெருங் கருணை
வெள்ள முகந் தருள் பொழியும் விமலாலோ சனநிதியை,
உள்ளமுவப் புறுதேனை, யுயிர்க்குயிரை, யுலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே.
2. ‘படிசாய்த்த பெரும் பாவப் பாரஞ் சுமந்து பரமர் திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்தழி செங் குருதியுக”
முடி சாய்ந்த பெருமானை, ‘மூதலகை தலை நசுக்கிக்
கொடி சாய்த்த ‘கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே,
3. மூவினைக்கு மும்முதலாய், மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
நாவினைக் கொண்டேத்தரிய நல்லறத்தின் தனித் தாயைத்
தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே.
4.மூவாத முதல்வனை, முது’சுருதி மொழிப் பொருளை,
ஓவாத பெருங்குணத்த உத்தமனை, உலகனைத்தும்
சாவாதபடி காக்கத் “தனுவெடுத்துத் துஜங்கட்குந்
தேவாதி தேவனை யான் சிலுவைமிசைக் கண்டேனே.
5. மறம் வளர்க்குங் களருளத்தை வளமலிதண் ‘பணையாக்கி
அறம் வளர்க்கும் அருண்முகிலின் அன்புமழை மாரி பெய்து
புறம் வளர்க்கும் இரக்ஷிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம் வளர்க்குஞ் செழுங் கிரியைச் சிலுவை மிசைக் கண்டேனே.
6. காயொளியில் கதிர்பரப்புங் களங்கமினீ தியின் சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னைப் பணிக்கருஞ் சிந்தாமணியைத்
தூயொளிகொள் ‘நித்திலத்தைத் தூண்டாத சுடர் விளக்கைச்,
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே.