காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola
காணாமல் போன ஆட்டை போல
வழி மாறி போனேன்
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்கு தந்தீர்
புயல் வீசும் கடலில்
படகை போல திசை மாறி போனேன்
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்கு தந்தீர்
ஆராதனை ஆராதனை
வாழ்நாளெல்லம்
ஆராதனை ஆராதனை
ஜீவநாட்களெல்லாம் (2)
நடக்கும் பாதைகளை
நாள்தோறும் காட்டுகிறீர் (2)
என் மேல் உம் கண்கள் வைத்து
ஆலோசனை தருகிறீர் (2)
ஆராதனை ஆராதனை
உம்மை மறப்பதில்லை
ஆராதனை ஆராதனை
வேதம் வெறுப்பதில்லை – ஆராதனை
உமக்கு பயந்திருப்பேன்
உம் கற்பனை கடைபிடிப்பேன்
கர்த்தா உம் கிருபையினால்
உம் பிரமாணம் போதிக்கின்றீர்
ஆராதனை ஆராதனை
என் நாட்கள் முடியும் வரை
ஆராதனை ஆராதனை
என் சுவாசம் நிற்கும் வரை – ஆராதனை