கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை
1. கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம் (2)
பாரெங்கும் தொனிக்க நற் செய்தி கூறியே
பாடிடுவோம் (2)
இயேசு என் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தில் தலைவரே
2. ஆவியின் பட்டயம் ஆயுதம் தரித்து
ஆயத்தமாகிடுவோம்
சோதனை சூழ்ந்தாலும் சோர்புகள் வந்தாலும்
வென்றிடுவோம்
3. போராட்டம் போராடி, ஓட்டத்தை முடிப்போம்
பேரருள் பெற்றிடுவோம்
பேரின்ப நாட்டில் பொற்கிரீடம் பெறுவோம்
பறந்திடுவோம்
4. கிறிஸ்துவைப் பின்பற்றும் வாலிபராகவே
வாஞ்சித்து நாடுகிறோம்
உலகை வெறுத்து உம்மையே நேசிக்க
படைக்கிறோம்.