
கிறிஸ்து இயேசு தயாள பிரபு – Kiristhu Yesu Thayaala Pirabhu
கிறிஸ்து இயேசு தயாள பிரபு – Kiristhu Yesu Thayaala Pirabhu
கிறிஸ்து இயேசு தயாள பிரபு
சிருஷ்டித்த தயவு
இரட்சித்த உந்தன் முடிவு
கீதம் பாடவே
சரணங்கள்
1. மாநிலத்தில் நீர் மானிடனானீர்
மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர்
மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர்
பாவி என்னை இரட்சிக்க – பிரிய இயேசு
2. விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க
புயல்களெல்லாம் அலைக் கழிக்க
இயேசுவே நீரே அலை அதட்டி
அக்கரைப் படுத்தினீர் – பிரிய இயேசு
3. பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன்
பாடுகள் பட்டும் பயனைக் காணேன்
பின்வந்து உந்தன் வஸ்திரந் தொட்டேன்
பிழைத்தேன் அச்சணமே – பிரிய இயேசு