கோடா கோடி தூதர்கள் – Koada koadi Thoothargal
கோடா கோடி தூதர்கள் – Koada koadi Thoothargal
கோடா கோடி தூதர்கள், பரிசுத்தவான்களால்
ஓயாமல் பரிசுத்தர் பரிசுத்தர்
என்று போற்றப்படுகின்றவரே
நீர் நினைப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்
இருந்தவர் இருக்கிறவர் வருகிறவர்
பரிசுத்தரே (2)
என் சிறுமையை நீர் நினைப்பவரே
என் தவிப்பையும் என்றும் நினைப்பவரே
என் நிந்தையை நீர் நினைப்பவரே
என் உபத்திரவத்தை நினைப்பவரே
கெஞ்சி பிரார்த்திக்கிறேன்
உம்மிடம் கெஞ்சி பிரார்த்திக்கின்றேன்
கெஞ்சி பிரார்த்திக்கிறேன்
உம்மிடம் கெஞ்சி பிரார்த்திக்கிறேன்
தடம் மாறி தடுமாறி நான் நின்றேனே
இது வரைக்கும் கிருபையால் கொண்டு வந்தீரே (2)
ஒன்றும் இல்லாய்மையிலே உயர்த்திய உன்னதரே
என்னை நினைத்துப் பார்க்க
நான் எம்மாத்திரம் (2)
கெஞ்சி பிரார்த்திக்கிறேன்
உம்மிடம் கெஞ்சி பிரார்த்திக்கிறேன்
நான் பயந்து இதயம் கலங்கி மிகவும் அழுதேனே
இரவும் பகலும் நினைத்து நினைத்து நான் அழுகின்றேன் (2)
என்னை ஆற்றி தேற்றி கண்ணீர் துடைப்பவரே
என்னை நினைத்துப் பார்க்க நான் எம்மாத்திரம் (2)
நீங்க நினச்சாலே போதும் கலக்கம் நீங்குமே
நீங்க நினைச்சாலே போதும் துன்பம் மாறுமே
நீங்க நினைச்சாலே போதும் இன்பம் பொங்குமே
நீங்க நினைச்சாலே போதும் என் வாழ்க்கை மாறுமே
நினைப்பவரே நினச்சிடுங்க நினச்சிடுங்க
என்ன நினச்சிடுங்க, கெஞ்சி பிரார்த்திக்கின்றேன்.