சகோதரர்கள் ஒருமித்துச் சஞ்சரிப்பது- Sakotharkar orumithu sanjarippathu Lyrics
சகோதரர்கள் ஒருமித்துச் சஞ்சரிப்பது – Sakotharkar orumithu sanjarippathu Lyrics
1. சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாழ்த்தல் செயலாயிருக்குமே
2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே
3. எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே
4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே
Sakotharkar orumithu sanjarippathu Lyrics in English
1.Sakotharkar orumithu
sanjarippathu Eththanai
Mahaa Nalamum Inbamum
Valththal Seyalaayirukkumae
2.Aaron Sirasil Vaarththai Nal
Abishekaththin Thailanthaan
Oori Thaadiyil Angiyil
Olugum Aanantham Polavae
3.Ermoan Malaiyin Pearilum
Isaintha Seeyon Malaiyilum
Searmaanamaai Peikintra
Thivalai Paniyai Polavae
4.Deasam Maarkkam Erandirkkum
Seanai Yehova Tharukira
Aaseervaatham Seevanaum
Angae Entrumullathae