சோபனமாக சுப தினமே – Shobanamaaga suba dhiname

Deal Score+1
Deal Score+1

சோபனமாக சுப தினமே – Shobanamaaga suba dhiname

பல்லவி

சோபனமாக சுப தினமே
மாபெரும் ஆசிகள் மகிழந்தருள்வீர்
சுப ஜெய மங்களமே (3) – ஆமென்

அனுபல்லவி

சீர்பெற திருமணம் என்றும் வாழ்க
அருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே

சரணங்கள்

1. ஆனந்தமாக வாழ்ந்திடவே
ஆண்டவனருளால் அனுதினமே
அன்பு கொண்டுந்தன் பதந் தொழுதே
அல்லல்கள் நீங்கி அகமகிழ்ந்தே – சீர்பெற

2. மாநில மீதில் மனமுவந்தே
மங்கள வாழ்வு தனிற் சிறந்தே
பாலெனப் பொங்கிப் பல வளனும்
பாக்கியம் புகழும் பரவிடவே – சீர்பெற

3. சந்ததி பெருகித் தழைத்திடவே
சாஸ்தவமாக நிலைத்திடவே
ஆனந்தமாக அமைந்திடவே
ஆரருள் வாழ்க்கை அழகுறவே – சீர்பெற

4. மங்களமாகும் இத்தினம்போல்
மகிழ்வுடன் மாண்பாய் இருபேரும்
தங்கவண் செல்வ நாயகனின்
தாழ்வறு திவ்விய அடி நிழற்கீழ் – சீர்பெற

பின்னும் அவன் அவர்களை நோக்கி:
நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து,
மதுரமானதைக் குடித்து,
ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்;
இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள்,
விசாரப்படவேண்டாம்;
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
10.Then he said unto them, Go your way,
eat the fat,
and drink the sweet,
and send portions unto them
for whom nothing is prepared:
for this day is holy unto our Lord:
neither be ye sorry;
for the joy of the LORD is your strength.
நெகேமியா :Nehemiah:8✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo