ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae
ஞான திரி முதலொரு பொருளே – Gnana Thiri Muthaloru Porulae
ஞான திரி ‘முதலொரு பொருளே, நரர் சுகமொடு வர அருள்
ஞான திரி முதலொரு பொருளே.
அனுபல்லவி
வானவர் துதி செய் அனாதி குருபரனே, ரீ ரீ ரீ ரீ
மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே. சரணங்கள்
1 மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே
மண்ணில் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே
வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே
விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூப வஸ்தே,
2 நித்தம் விக்கினம் வராமல் ரட்சித்த நன்னேசா
நெஞ்சில் கவலை, துயர் நீக்கும் சந்தோஷா,
சத்துருப் பசாசின் முடி தறித்த உல்லாசா,
சந்ததம் இச்சபையை ஆதரிப்பாய், சர்வேசா
3.புவியில் அநேக நரர் போயினர் முன்மாண்டு,
பூர்த்தியாய்க் காப்பாற்றி வைத்தீர் புகுத இவ்வாண்டு
திவ்ய திருச்சபையோ சிறிய கடுகுப் பூண்டு
திரண்ட மரம்போலாகிச் செழிக்கவும் நீண்டு
4.தின முன தருள் புரி சீயோன் அனுகூலா
தேசிகர் உளம் களிக்கச் சிறக்கும் நன்நூலா,
மன நலம் தரும் ஒரு பரகுரு பாலா,
வருட முதலில் புது வரமருள், சீலா.