
தந்தை சருவேஸ்பரனே – Thanthai Saruveasparanae Lyrics
தந்தை சருவேஸ்பரனே – Thanthai Saruveasparanae
பல்லவி
தந்தை சருவேஸ்பரனே, உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே-இம்மாத்ரம் நீயே,
சரணங்கள்
1. அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி,
விந்தை அருள் மேவும் அசரீரி, மெய்ஞ்ஞான வாரி! – தந்தை
2. ஞானபரனே, ஒருத்வ மானமுதலே, திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந்தை
3. விற்பன விவேக நூலா, அற்புதமான சீலா,
நற்பரம லோக அனுகூலா, நன்மை க்ருபாலா! – தந்தை
4. ஆதிமுதலான நேசா, வேதமறை மீதுலாசா,
பேதகம் இலாத சத்ய வாசா, ஞான ப்ரகாசா! – தந்தை
5. வந்த வினை யாவும் தீரும், நிந்தை அணுகாமல் காரும்;
சிந்தை மகிழ்ந்தே, கண்ணாலே பாரும்; சீர்பாதம் தாரும்! – தந்தை
Thanthai Saruveasparanae Lyrics in English
Thanthai Saruveasparanae Unthan Magan Yesuvukkaai
Enthan Mugam Paarththiranguvayae Emmathram Neeyae
1.Antha Mathilaa Agaari Santhathamumae Visaari
Vinthai Arul Meavum Asareeri Meignana Vaari
2.GnanaParanae Oruthva Maanamuthalae thirithva
Meanmai Vadivaana Makthva Mealaanathva
3.Virparanai Viveka Noolaa Arouthamaana Seelaa
Narmaram Loga Anukoolaa Nanmai Kirupaala
4.Aathi Muthaalaana Neasaa Vedhammarai Meethulaasaa
Pethagam Ilatha Sathya Vaasaa Gnnana Pirakaasa
5.Vantha Vinai Yaavym Theerum Ninthai Anukaamal Kaarum
Sinthai Magilnthae Kanaalae Paarum Seer Paatham Thaarum