தந்தை சுதன் ஆவியே – Thanthai Suthan Aaviyae Lyrics

Deal Score0
Deal Score0

தந்தை சுதன் ஆவியே – Thanthai Suthan Aaviyae Lyrics

1.தந்தை சுதன் ஆவியே,
ஸ்வாமியாம் திரியேகரே,
வானாசனமீதுற்றே,
எங்களுக்கு இரங்கும்.

2.நிந்தை, கஸ்தி, தேவரீர்
எங்கள் பொருட்டடைந்தீர்;
தாசர் வேண்டுதலை நீர்
கேளும், தூய இயேசுவே.

3. சீஷர் மூவர் தூங்கவே,
கெத்செமனே காவிலே
உற்ற வேதனையாலே
கேளும், தூய இயேசுவே.

4.தந்தை சித்தம் ஆகவும்;
வந்த பாத்திரம் நீங்கவும்,
நீர் ஜெபித்ததாலேயும்
கேளும், தூய இயேசுவே.

5. யூதாஸ் முத்தஞ் செய்யவே,
யூதர் உம்மைக் கட்டவே,
சிறைப்பட்டதாலுமே
கேளும், தூய இயேசுவே.

6.வாரால் பட்ட காயமும்,
போர்த்த சிவப்பங்கியும்,
முள்ளின் கிரீடமூலமும்
கேளும், தூய இயேசுவே.

7.ராஜன் உம்மைத் தள்ளியே,
கள்ளன் பரபாசையே
கேட்டுக்கொண்டதாலுமே
கேளும், தூய இயேசுவே.

8. “சிலுவையில் அறையும்”
என்று யூதர் கூவவும்,
சாகச் சென்றதாலேயும்
கேளும், தூய இயேசுவே.

9. நீர் சுமந்த குரூசாலே,
நீர் குடிக்கும் படிக்கே
தந்த காடியாலுமே
கேளும், தூய இயேசுவே.

10.கால் கரத்தில் ஆணியும்,
காட்டும் மேல்விலாசமும்,
காரிருள் நிமித்தமும்
கேளும், தூய இயேசுவே.

11. ஆடை சீட்டுப் போட்டதால்,
சாவின் வாதை பார்க்குங்கால்,
யூதர் செய்த நிந்தையால்
கேளும், தூய இயேசுவே.

12.சொன்ன ஏழு வார்த்தையால்
சோர்ந்து தலை சாய்ந்ததால்,
உந்தன் பிரேதச் சேமத்தால்
கேளும், தூய இயேசுவே.

13.சோதனை நெருக்கத்தில்,
நாங்கள் தொய்ந்து போகையில்,
உந்தன் சாவின் வன்மையில்
காரும், தூய இயேசுவே.

14. உம் சிலுவைப் பொருட்டே
யாவும நஷ்டம் எனவே
நாங்கள் எண்ணும்படிக்கே
காரும், தூய இயேசுவே.

15.நாங்கள் உம்மைப் பற்றியே,
சாவின் நோவைக் கடந்தே,
உம் சமூகம் சேரவே
காரும், தூய இயேசுவே.

Thanthai Suthan Aaviyae Lyrics in English

1.Thanthai Suthan Aaviyae
Swamiyaam Thiriyeakarai
Vaanaasana Meethuttrae
Engalukku Erangum

2.Ninthai Kasthi Devareer
Engal Poruttadaintheer
Thaasar Veanduthai Neer
Kealum Thooya Yesuvae

3.Sheehar Moovar Thoongavae
Kethsemanae Kaavilae
Uttra Veadhanaiyaalae
Kealum Thooya Yesuvae

4.Thanthai Siththam Aagavum
Vantha Paaththiram Neengavum
Neer Jebiththathalaeyum
Kealum Thooya Yesuvae

5.Yuthaas Muththam Seiyavae
Yuthar Ummai Kattavae
Siraipattathaalumae
Kealum Thooya Yesuvae

6.Vaaraal Patta Kaayamum
Poarththa Sivapangiyum
Mullin Kireedamoolamum
Kealum Thooya Yesuvae

7.Raajan Ummai Thalliyae
Kallan Parapaasaiyae
Keattukondathaalumae
Kealum Thooya Yesuvae

8.Siluvaiyul Araiyum
Entru Yuthar Koovavum
Saaga Sentrathalaeyum
Kealum Thooya Yesuvae

9.Neer Sumantha Kurusalae
Neer Kudikka Padikkae
Thanthae Kaadiyalumae
Kealum Thooya Yesuvae

10.Kaal Karaththil Aaniyum
Kaattum Mael Vilasamum
Kaarirul Nimiththamum
Kealum Thooya Yesuvae

11.Aadai Seettu Pottathaal
Saavin Vaathai Paarkkunkaal
Yuthar Seitha Ninthaiyaal
Kealum Thooya Yesuvae

12.Sonna Yealu Vaarththaiyaal
Soarnthu Thalai Sainthathaal
Unthan Piratha Seamaththaal
Kealum Thooya Yesuvae

13.Sothanai Nerukkaththil
Naangal Thointhu Pogaiyil
Unthan Saavin Vanmaiyil
Kaarum Thooya Yesuvae

14.Um Siluvai poruttae
Yaavum Nastam Enavae
Naangal Ennum Padikkae
Kaarum Thooya Yesuvae

15.Naangal Ummai Pattriyae
Saavin Novai Kadanthae
Um Samoogam Searavae
Kaarum Thooya Yesuvae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo